தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்களின் தாயாரான தேசத்தின் தாய் பார்வதி அம்மாள் அவர்கள் தற்போது வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல் நிலை தொடர்பாக ஈழதேசம் இணைய செய்தியாளர் வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு இன்று தொடர்பு கொண்டு கேட்ட போது:தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் அவர்களின் உடல் நிலை தற்போது மோசமாகியுள்ளதாகவும் தற்போது தலைவர் தாயார் உணவை உண்ண மறுப்பதாகவும் அதனால் அவர் தற்போது பால் மட்டுமே அருந்தி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் எம்மிடம் தெரிவித்துள்ளன.