வெலிஓயா இராணுவ முகாமில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் பெண் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த குறித்த பெண் சிப்பாய் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண் படைச் சிப்பாய் பிபிலையைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.