யாழ்ப்பாணத்தில் சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும் படையினர்
யாழ்ப்பாணத்தில் சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆபாசப் புத்தகங்கள் மற்றும் சீடீக்களின் விற்பனை, கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துக்களின் பாவனை போன்றவற்றை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் படையினர் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை படையினரே தென்னிலங்கையிலிருந்து கொண்டு வந்து தமக்கு நெருக்கமானவர்கள் மூலம் மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே விநியோகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாகப் பணத்தினைப் பெற்றுக் கொள்ளும் யாழ்ப்பாண இளைஞர்கள் ஆடம்பரப் பிரியர்களாக மாறியிருப்பதாகவும் இவர்களில் பலர் கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துப் பாவனையை ஆரம்பித்திருப்பதாகவும் யாழ்ப்பாணச் செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாண இளைஞர்கள் வழிதவறிப் போவதைத் தடுப்பதற்கு வெளிநாட்டிலுள்ள உறவினர்களும் இளைஞர் யுவதிகளுக்கு பெருமளவு பணத்தை நேரடியாக வழங்குவதும் ஒரு காரணம் எனக் குறிப்பிடும் ஆர்வலர்கள் பண விடயத்தில் சற்றுப் பொறுப்புடன் நடந்து கொள்வது புலத்திலுள்ளவர்களின் கடமை எனவும் சுட்டிக் காட்டுகின்றனர்.
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- புலிகளின் ஆயுதங்கள் மீட்பாம்,ஆயுதங்கள் விளையும் பூமியாக மாறிவரும் முல்லைத்தீவு
- துப்பாக்கி வெடித்ததால் குண்டு பாய்ந்து சிப்பாய் மரணம்!
- அவசரகால சட்டம் வாக்கெடுப்பின்றி ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு
- 07-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 5 மாவீர்களின் வீரவணக்க நாள் இன்று
- சமூகத்தில் இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்கு அருமருந்தாய் திகழ்ந்தது “குடி அரசு” – கொளத்தூர் மணி
- சிறீலங்காவின் தலைநகரில் நடைபெறவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை புறக்கணிப்போம்: டென்மார் தமிழர் பேரவை
- புதிய அரசியல் சட்டத்தை எதிர்த்து சிறீலங்கா நாடாளுமன்றம் முன்பாக உண்ணாவிரதம்
- தென்ஆசியா பிராந்தியத்தை தனது காலடிக்குள் கொண்டுவர திட்டமிடுகிறது சீனா: மன்மோகன் கடும் தாக்கு
- 18 வது அரசியல் சீர்திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல: உயர் நீதிமன்றம் தீர்ப்பு






