பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். 77.500 ஆயிரம் ஸ்டெர்லிங் பவுண்ட் நஷ்ட ஈடு
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கையில் போரை நிறுத்தக் கோரி 2009 ஆம் ஆண்டு லண்டனில் வாழும் இலங்கை தமிழர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தின் முன் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக பரமேஸ்வரன் 23 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
ஆனால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அவர் ரகசியமாக பர்கரை சாப்பிட்டதாக லண்டனில் வெளியாகும் டெய்லி மெயில் மற்றும் சன் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதற்கு எதிராக பரமேஸ்வரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று வியாழக்கிழமை லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கு விசாரணையின் போது சம்மந்தப்பட்ட இரு பத்திரிக்கைகளின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களும் தாங்கள் வெளியிட்ட செய்திக்கான ஆதாரங்கள் இல்லை என்று ஒப்புக் கொண்டார்கள். இது குறித்த மறுப்பை வெளியிடவும், பரமேஸ்வரனுக்கு 77.500 ஆயிரம் ஸ்டெர்லிங் பவுண்ட் நஷ்ட ஈடு தரவும் அந்த இரு பத்திரிகைகளும் ஒப்புக்கொண்டதாக பரமேஸ்வரனின் வழக்கறிஞர் மேக்னஸ் பாயிட் தெரிவித்தார்.
இந்த பத்திரிக்கைகளின் பொய்ச்செய்தி காரணமாக, கடந்த எட்டு மாதங்களாக தான் மிகுந்த அவமானங்களை சந்தித்ததாகவும் இந்த நிலையில் இன்று வந்துள்ள தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் பரமேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
போராட்டத்தின் போது பல தமிழ் அமைப்புக்கள் பங்கேற்றாலும் தனக்கு தனிப்பட்ட முறையில் அவை உதவ முன்வரவில்லை என்றும், வெற்றிபெற்றால் வக்கில் சன்மானம் என்ற அடிப்படையிலேயே தான் வழக்கறிஞரை அமர்த்தி இந்த வழக்கை எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வியாழக்கிழமை, 29 ஜூலை 2010 17:23 )
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- புலிகளின் ஆயுதங்கள் மீட்பாம்,ஆயுதங்கள் விளையும் பூமியாக மாறிவரும் முல்லைத்தீவு
- துப்பாக்கி வெடித்ததால் குண்டு பாய்ந்து சிப்பாய் மரணம்!
- அவசரகால சட்டம் வாக்கெடுப்பின்றி ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு
- 07-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 5 மாவீர்களின் வீரவணக்க நாள் இன்று
- சமூகத்தில் இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்கு அருமருந்தாய் திகழ்ந்தது “குடி அரசு” – கொளத்தூர் மணி
- சிறீலங்காவின் தலைநகரில் நடைபெறவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை புறக்கணிப்போம்: டென்மார் தமிழர் பேரவை
- புதிய அரசியல் சட்டத்தை எதிர்த்து சிறீலங்கா நாடாளுமன்றம் முன்பாக உண்ணாவிரதம்
- தென்ஆசியா பிராந்தியத்தை தனது காலடிக்குள் கொண்டுவர திட்டமிடுகிறது சீனா: மன்மோகன் கடும் தாக்கு
- 18 வது அரசியல் சீர்திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல: உயர் நீதிமன்றம் தீர்ப்பு






