ef ஈழத் தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் இலங்கை செல்லவுள்ள தமிழ்த் திடைப்பட காமெடி நடிகர் கருணாஷ் அவர்கள் நடித்து,தயாரித்து வெளிவந்துள்ள அம்பா சமுத்திர அம்பாணி திரைப்படத்தை மும்பையிலுள்ள அரோரா திரையரங்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.


ef
கருணாஷ் அவர்களின் திரைப்படத்தை திரையரங்கிலிருந்து நீக்குமாறு நாம் தமிழர் கட்சியின் மீனவ அணியினர் நடத்திய போராட்டத்தை அடுத்தே இந்தத் திரைப்படம் மும்பை அரோரா திரையரங்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
ef
குறிப்பிட்ட திரைப்படத்தை சன் குழுமத்தின் நிதியில் கருணாஷ் அவர்களால் தயாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ef
சன் குழுமம் வழங்கிய பணத்தில் தனது படத்தை தானே தயாரித்துள்ளதால் அதற்கு சன் குழுமத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே அவர் இலங்கைக்கு செல்லவுள்ளார் என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.ef

 


முன்

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வியாழக்கிழமை, 29 ஜூலை 2010 13:21 )