ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து நாடு கடத்தப்பட்டுள்ள தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் சினவத்ரா கடந்த 25 ஆம் திகதி இலங்கை சென்று, கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் சுமார் 10 மணிநேரம் தங்கியிருந்தாக கட்டுநாயக்க விமான நிலையத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கம்போடியாவின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றி வரும் சினவத்ரா, விசேட விமானம் மூலம் இலங்கை சென்றுள்ளார்.

இலங்கையில் உள்ள நிறுவனமொன்றின் விசேட அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்த சினவத்ரா கடந்த திங்கட்கிழமை சிசல்ஸ் சென்றுள்ளார். தக்சின் சினவத்ரா இதற்கு முன்னரும் இலங்கை விஜயம் செய்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்திருந்தது.