எந்தவொரு பயங்கரமான குற்றவாளியையும் அரசாங்கத்தின் சாட்சியாளராக அவரின் உதவியை பெற்றுக்கொள்ள நாட்டின் சட்டத்தில் இடம் உண்டு ‐ கெஹெலிய
எந்தவொரு பயங்கரமான குற்றவாளியையும் அரசாங்கத்தின் சாட்சியாளராக, அவரின் உதவியை பெற்றுக்கொள்ள நாட்டின் சட்டத்தில் இடம் இருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலத்திற்காக மன்னிப்பு வழங்கி,
நாட்டின் அடிப்படை சட்டத்தை மீறாத வகையில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் ரம்புக்வெல்ல கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கே.பி என்ற குமரன் பத்மநாதன் தொடர்பில் இப்படியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை தன்னால் தற்போது கூறமுடியாது எனவும் ஊடகத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் செயற்பட்டு வந்த கே.பியை அரசாங்கம் தனது சாட்சியாளராக பயன்படுத்த உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வியாழக்கிழமை, 29 ஜூலை 2010 10:01 )
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- புலிகளின் ஆயுதங்கள் மீட்பாம்,ஆயுதங்கள் விளையும் பூமியாக மாறிவரும் முல்லைத்தீவு
- துப்பாக்கி வெடித்ததால் குண்டு பாய்ந்து சிப்பாய் மரணம்!
- அவசரகால சட்டம் வாக்கெடுப்பின்றி ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு
- 07-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 5 மாவீர்களின் வீரவணக்க நாள் இன்று
- சமூகத்தில் இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்கு அருமருந்தாய் திகழ்ந்தது “குடி அரசு” – கொளத்தூர் மணி
- சிறீலங்காவின் தலைநகரில் நடைபெறவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை புறக்கணிப்போம்: டென்மார் தமிழர் பேரவை
- புதிய அரசியல் சட்டத்தை எதிர்த்து சிறீலங்கா நாடாளுமன்றம் முன்பாக உண்ணாவிரதம்
- தென்ஆசியா பிராந்தியத்தை தனது காலடிக்குள் கொண்டுவர திட்டமிடுகிறது சீனா: மன்மோகன் கடும் தாக்கு
- 18 வது அரசியல் சீர்திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல: உயர் நீதிமன்றம் தீர்ப்பு






