சரத்,கோத்தபாய ஆதரவு இராணுவத்தினரிற்கிடையில் மணலாற்றில் மோதல் 40 இராணுவத்தினர் படுகாயம்
கடந்த 25 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மணலாற்றில் முன்னால் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அவர்களின் ஆதரவு இராணுவத்தினரிற்கும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய அவர்களின் ஆதரவு இராணுவத்தினரிற்குமிடையிலும் நடைபெற்ற வாக்குவாதம் சண்டையாக மாறி துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டுள்ளது இதில் 40க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.
குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்றதையடுத்து காயமடைந்த இராணுவத்தினர் முல்லைத்தீவு இராணுவ வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர் அதனையடுத்து அனுராதபுர வைத்தியசாலைக்கு உலங்குவானூர்தி மூலம் கொண்டுசெல்லப்பட்டிருந்தனர்.
அனால் இந்த செய்தியை சில இணையங்கள் வேறுவிதமாக மெருகு படுத்தி பிரசுரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிவதற்கு ஈழதேசத்துடன் என்றும் இணைந்திருங்கள்.



தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்கு தனிநாட்டை அமைத்துக்கொடுக்கும் இலட்சியத்தை கொண்டதுமான ஒரு அரசியல் அமைப்பாகவே செயற்பட்டுவந்ததாக நியூசிலாந்து உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
